• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குழித்துறை நீதிமன்றம்ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.

நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்த குழித்துறை நீதிமன்ற ஊழியர் நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவரது தந்தைக்கு எனது இந்த முடிவுக்கு காரணமானவர் யார் என்பது குறித்து அனுப்பிய ஆடியோவில், நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

அவர் சாதி அடிப்படையில் விமர்சனம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நாகராஜனின் மனைவி நீதி கோரி கண்ணீருடன் வேதனை வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் உடலை குடும்பத்தாரும், சமூக அமைப்பினரும் வாங்க மறுத்து வரும் நிலையில், குமரி இராஜாக்க மங்கலம் நிகழ்வில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன திருமாவளவன் வந்திருக்கும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.