புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகவும் தென்கலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயம் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பெருமாளின் கன்னன் பாடல்கள் பாடியும் நமோ நாராயணா வாசக பாடல்களைப் பாடியும் வழிபட்டனர்.

அப்போது பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் என ஒன்பது வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சொர்ண அங்கி செலுத்தப்பட்ட பெருமாளுக்கு சிறப்பு தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.