• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

ByP.Thangapandi

Sep 1, 2024

உசிலம்பட்டி பகுதியில் பொதுநல அமைப்புகள் சார்பாக நடைபெற்று வரும் கண்மாய் சீரமைப்பு பணி, மூன்றாவது கண்மாய் சீரமைப்பு பணி துவங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கண்மாய்கள் சீரமைக்கும் பணியை உசிலம்பட்டி அரிமா சங்கம், 58 கால்வாய் விவசாயிகள் சங்கம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மூன்றாவது கண்மாயாக உசிலம்பட்டி அருகே உள்ள சிறுப்பட்டி கண்மாய் சீரமைப்பு பணி துவங்கப்பட்டது.

இதை அரிமா சங்க தலைவர் பிரேம்குமார் 58 கால்வாய் பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் நேதாஜி தலைமையில் ஊர் மக்கள் சார்பாக துவங்கி வைத்தனர்.

ஏற்கனவே பசுக்காரன்பட்டி பந்தாணி கண்மாய் மற்றும் பாப்பாபட்டி பாப்பான்குளம் கண்மாய் பணிகள் முடிவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.