• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக அமைச்சர் தொகுதியில் கண்மாய் மாயம்

Byp Kumar

Feb 17, 2023

மதுரை திமுக அமைச்சர் மூர்த்தி தொகுதியில் கண்மாய் மாயமானது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
மதுரை அழகர் கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் உள்ள மூன்றுஏக்கர் பரப்பிலான கண்மாய் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது ..இந்நிலையில் அந்த கண்மாயின் மீதமுள்ள பகுதியை தனி நபருக்கு பட்டா வழங்குதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. இதுபோன்று சின்னவாகுளம்,அண்டமாண் கிராம கண்மாய் மற்றும் கண்மாய்க்கு செல்கின்ற பொதுப் பாதை முழுவதும் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது .


இதற்கு முன்னாள் கிராம நிர்வாக அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை .மேலும் ஆக்கிரமிப்பு நபர்களுக்கு பட்டா வழங்குகின்ற முயற்சியில் சில அதிகாரிகள் இறங்கியுள்ளனர் இது போன்று அழகாபுரி கிராமத்தில் தண்ணீர் தொட்டி ,நாடக மேடை உள்பட கிராமத்தின் பொது தேவைக்கு பயன்படுத்தி வருகின்ற பல்வேறு கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த மனு மீது தக்க நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி காணாமல் போன கண்மாயை மீட்டு தர வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது..