திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என்று கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகளில், ” தென்னகத்தின் உரிமைக்குரலாய் – தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் – தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் – தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.