• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி

ByA.Tamilselvan

Jan 5, 2023

திமுக துணைப்பொதுச் செயலாளரும். மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
திமுக துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனிமொழி, தனது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவரும், அவரது சகோதரருமான முதல்வர் ஸ்டாலினிடம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழிக்கு சால்வை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.