• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திமுக தலைமையிலான கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை பெத்தானியபுரத்தில் கனிமொழி எம்பி பிரச்சாரம்

Byகுமார்

Apr 4, 2024

திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளார் சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுத்து போராட கூடியவர்.
இப்பகுதியில் உள்ளவர்கள் தொழிவான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். பா.ஜா.க ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை ஒரவஞ்சமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். நம்மளை மதிப்பதை கிடையாது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமண அடிக்கல் நாட்டியதோடு சரி, பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றுசொல்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பானில் இருந்து நிதி வரவேண்டுமாம்.

மதுரை விமான நிலையத்திற்கு அதிக பயணிகள் வந்து செல்லக்கூடிய விமான நிலையத்தை பண்ணாட் சர்வதேச மையமாக்க அறிவிக்க முடியாத மோடி அரசு, உத்திரபிரதேசம், வாரணாசி போன்ற விமான நிலையங்கள் பன்னாட்டு விமான நிலையமாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய முடியாதவர்கள், ஆதானி அம்பானிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

டெல்லியில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுபவர்களை துப்பாக்கி சூடு. கண்ணீர் புகையிலானும் டிராக்டரை ஏற்றிகொள்கிறார்கள்.

காங்கிரஸ் கொண்டு வந்த 100 நாள் வேலைநிறுத்தத்தை கூலி கொடுக்காமல் திட்டத்தை நிறுத்தப்பார்க்கும் மோடி அரசு, மோடி ஆட்சியில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறியவர்கள் இதுவரை எந்த இளைஞர்களுக்கும் வேலை கொடுக்கவில்லை. மோடியிடம் கேள்வி கேட்டால் தேச துரோகி EDயை விட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பிஜேபி மீண்டும் வந்தார் அடுத்த தேர்தல் எதுவும் நடக்காது. சர்வாதிகார நாடாக மாறிவிடும். மக்களின், குழந்தைகளின் நலன்காக்க வேண்டும் என்றால் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிப்பீர்.