• Mon. Apr 29th, 2024

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையம் பூட்டப்பட்டு இருப்பதால் 3 மணி நேரம் காத்திருப்பு.

ByKalamegam Viswanathan

Feb 14, 2024

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்தும் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தர் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அலுவலர்களை வரவழைத்தது பல்கலை துணைவேந்தர் – அலுவலர்கள் பனிப் போர் வெளிச்சத்திற்கு வந்தது.

பல்கலை அதிகாரிகளின் அலச்சியத்தால் அலைக்கழிக்கப்படும் பேராசிரியர்கள் .

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளில் இருந்து நவம்பர் மாதம் நடைபெற்ற பருவநிலை தேர்வுதாள்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூ.வ. அரங்கில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ராஜபாளையம், சிவகாசி , விருதுநகர் மற்றும் தேனி, பெரியகுளம் திண்டுக்கல் பகுதியில் இருந்து பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக மு.க. அரங்கிற்கு வந்தனர். காலை 9.30 வருகை தந்தவர்கள் பிற்பகல் 12.30 வரை மு.க. அரங்கு கதவு திறக்கப்படவில்லை.

பல்கலை கழகத்தில் ஊழியர்களுக்கு தற்போது இரண்டு மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் , பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் விடைத்தாள் திருத்தும் பணி மையம் திறக்கப்படவில்லை.

விடைத்தாள் திருத்தும் மையம் பூட்டப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த பேராசிரியர்கள் பதிவாளரை சந்தித்து கூறினர் .

அதனை தொடர்ந்து வருகை தந்த பேராசிரியர்களுக்கு ஓ.டி .வழங்கப்பட்டு மற்றொரு நாளில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஈடுபடுத்தப்படுவதாக கூறியுள்ளனர் .

விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, தேனி, பெரியகுளம் திண்டுக்கல் போன்ற ஊர்களில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிக்காக 150 பேராசிரியர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *