தென்காசி மாவட்டத்திலுள்ள பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சியின் முதல்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் தலைவர் ஹபீபுர் ரகுமான் தலைமையில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் ராஜையா மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் அனைத்து வார்டு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு சாலை வசதி கழிவு நீரோடை மின் விளக்கு பணிகள் நடைபெற தீர்மானம் கொண்டு வரப் பெற்றுள்ளது. நகர்மன்ற தலைவரால் ஆறு ஆண்டுகள் கழித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நகராட்சி, பேருராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல், பின்னர் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியும் பெருவாரியான இடங்களில் ஆளும் தி.மு.க கட்சிக்கு அதிக இடங்களை கொடுத்த தமிழக வாக்காள பெருமக்கள், தமிழக முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் தென்காசி மாவட்ட (வடக்கு) செயலாளர் செல்லத்துரை ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், மேலக்கடையநல்லூர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021- 22 ன் கீழ் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வருவதால் முதல் நிலை நகராட்சியான பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் 13 வது வார்டு மலம்பாட்டை சாலை மயானத்தில் மேலும் ஒரு எரிவாயு தகன மேடை அமைத்திடவும் முதல் நிலை நகராட்சிக்குரிய பணியிடங்களையும் அனுமதித்து அடிப்படை ம்ற்றும் சேவைப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் நகர்மன்ற கூட்ட அரங்கில் தமிழக முதல்வர் படத்தை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மூலம் திறக்கவும் நகர்மன்ற தலைவர் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுபகுதிகளிலும் முழுவதுமாக தாமிரபரணி ஆற்று நீரினை குடிநீராக வழங்கிட உரிய கட்டமைப்பு வசதிகள் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விரிவான ஆய்வு திட்டம் நடை முறை படுத்திட கடையநல்லூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றி தர தமிழக முதல்வரையும், நகர்ப்புற வள்ர்ச்சி துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் கூட்டத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.