அதிமுகழக பொதுச்செயலாளர்எடப்பாடியார்* அவர்களின், 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிவகாசி, சட்டமன்ற தொகுதி உட்பட விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஆகிய பகுதிகளிலும் பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பல்லாண்டு வாழ வேண்டும் எனவும் மீண்டும் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் எனவும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் 1500 பேர் கலந்து கொண்ட மாபெரும் ரத்ததான முகாம் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. சிவகாசி சிவன் கோவில் தங்க ரதம் இழுக்கப்பட்டது.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு: ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தரிசனத்தில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்து வந்தார் , பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார்.
கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் ஜான் மகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா முத்தையா,சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பலராமன் ,சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், பிலிப் பாசு, உள்பட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
