• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மீண்டும் பிரதமாரகிறாரர் ஜூன்ஸ்டின் ட்ருடோ

கனடா நாட்டில் 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை.

ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி 155 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதனால் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ நீடித்தார்.

இதற்கிடையே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துவதை விரும்பாத ஜஸ்டின் ட்ருடோ முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி கனடா பாராளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ருடோக்கும், கன்சர்வேட்டிவ் எரின் ஓடூல் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், உடனே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி 156 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் மீண்டும் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சியை பிடித்துள்ளது. இம்முறையும் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து டிவிட்டரில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.