• Thu. Mar 23rd, 2023

சத்யராஜ் நடித்துள்ள தீர்ப்புகள் விற்க்கப்படும் நாளை வெளியாவதில் சிக்கல்

சத்யராஜ் நடிப்பில் நாளை(31.12.2021)வெளிவர இருக்கும் படம் தீர்ப்புகள் விற்கப்படும். இந்த படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் விழாவில் முன்னாள் நீதிபதி சந்த்ருவும், போலீஸ் அதிகாரி திலகவதியும் கலந்து கொண்டு தலைப்பை ஆதரித்து பேசியது அப்போது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படத்தின் தலைப்பு குறித்து சத்யராஜ் கூறியிருப்பதாவது: தீர்ப்புகள் விற்கப்படும் கதையை இயக்குனர் தீரன் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதே சமயம் படம் பற்றி மிகவும் கவலையாகவும் உணர்ந்தேன். இதன் திரைக்கதை நிச்சயமாக மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. எனது கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. கதை கேட்டவுடனே உடனடியாக படப்பிடிப்பிற்கு செல்ல தோன்றியது.

ஆனால் இன்னொரு வகையில் தற்போதைய சமூகப் பிரச்சினையைக் நேரடியாக கையாளும் அழுத்தமான கருப்பொருளைக் இந்தப்படம் கொண்டிருப்பதும், படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கு தவிர்க்க முடியாத சுமையை உருவாக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. இருப்பினும், இயக்குனர் தீரன் மிக அழகாக இப்படத்தை கையாண்டு, இப்போது திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

நேர்மைமிக்க மற்றும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கு சரியாக செயல்பட்டால், ஒரு சாமானியன் சட்டத்தைக் கையில் எடுப்பது எப்போதும் அவசியமில்லை என்பதை, வலுவாக நியாயப்படுத்தும் சமூகத்திற்கு பொருத்தமான தலைப்பைக் கையாள்கிறது இந்தப் படம்.அதே நேரத்தில், இந்த படம் வன்முறையைத் தூண்டாது.

திரையரங்கில் படத்தை பார்த்த பிறகு, இந்த படத்தின் தலைப்பிற்கான மதிப்பை ரசிகர்கள் கண்டிப்பாக உணருவார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து பார்வையாளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள், இந்தப் படம் பார்த்த பிறகு, ஆழமான தாக்கத்துடன் அவர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவார்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும்என்று படத்தை சத்யராஜ்புரமோஷன் செய்துகொண்டிருக்க நாளை படம் வெளியாகுமா என்கிற சிக்கல் எழுந்துள்ளதுஇப்படத்தை கேரளாவைச் சேர்ந்த ஹனி பீ கிரியேஷன்ஸ் மற்றும் இன்பினிட்டி பிரேம் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஆரம்பித்தன. ஆனால், இப்படத்தைத் தங்களது பெயரை சேர்க்காமல் முதல் பார்வை மற்றும் இரண்டாம் பார்வை ஆகியவற்றை ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டதாக இன்பினிட்டி நிறுவனம் குற்றம் சாட்டியது.தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்பினிட்டி நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்பினிட்டி நிறுவனத்திற்குத் தெரியாமல் படத்தின் முழு உரிமையையும் அல் டாரிஸ் என்ற நிறுவனத்திற்கு ஹனி பீ நிறுவனம் விற்றுள்ளது.இதனிடையே, இன்பினிட்டி நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுஅதன்படி படத்தை தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் வெளியிட ஆலப்புழா மாவட்ட துணை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


படத்தை அல் டாரிஸ் நிறுவனத்திடமிருந்து தமிழக வெளியீட்டு உரிமையை 11 : 11 புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்பட்டது.


நீதிமன்றத் தடை இருக்கும் நிலையில் இப்படம் எப்படி நாளை வெளியாகும் என இன்பினிட்டி பிரேம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுதாகரன் கேள்வி எழுப்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *