• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மறைந்த வழக்கறிஞரின் குடும்பத்திற்கு உதவித்தொகையை வழங்கி நீதிபதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து, மறைந்த பாலாஜியின் இறப்பிற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் மூலம் ரூபாய் 50,000 க்கான காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன் தலைமையில் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரான மறைந்த பாலாஜியின் இறப்பிற்கு இந்திய பார்கவுன்சில் சார்பில் தமிழ்நாடு பார் கவுன்சில் மூலம் ரூபாய் 50,000 க்கான காசோலையை வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் முருகேசன், அரசு வழக்கறிஞர் அண்ணாமலை, ரவி மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இன்று திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் மூலம் பாலாஜியின் மனைவி சங்கீதாவிடம் வழங்கினார்.