• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தேசப்பிதாவுக்கு மரியாதை செய்த பத்திரிகையாளர்கள்

Byகுமார்

Jan 28, 2024

இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச்சங்கத்தின் தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், துணைத்தலைவர் ஆ.மாயகிருஷ்ணன், துணைச்செயலாளர் முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் தேசிய கொடி அட்டைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணன் அவர்களுக்கு தேசிய கொடியை வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலருக்கு தேசியக்கொடி அட்டை வழங்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் தல்லாகுளம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சிறந்த பணியாளராக மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற தீயணைப்பு-மீட்புப் பணி துறை பணியாளர் மீ.கணேசனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தேசியக்கொடி அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.