புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அறக்கட்டளை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது .
இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர், பல்வேறு தனியார் நிறுவனங்களில் நேர்காணலில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் .
200க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதே போல் மூன்று ஆண்டுக்கு முன்னர் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஒரு பெண் தற்போது தனியார் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிவது சந்தோஷம் என்று சி. விஜயபாஸ்கர் பேச்சால் அரங்கு முழுவதும் கைதட்டில் நிறைந்தது .

உணவு மற்றும் தேனீர் குறைந்த விலையில் விற்கப்பட்டதால் வேலை தேடி வந்தவருக்கு உதவியாக இருந்தது .
பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டோர்கள் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவித்தனர்.