• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழக பள்ளி கல்வித்துறையில் வேலை வாய்ப்பு

ByA.Tamilselvan

Jun 17, 2022

தமிழக பள்ளி கல்வித் துறை பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
Senior Fellows & Fellows போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்களை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
இப்பணிக்கு இம்மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும் , Fellowship (TNEF) ரூ.32,000/-Senior Fellow ரூ.45,000/-
என சம்பள விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Fellowship (TNEF) பணிக்கு ஏதாவது ஒரு துறையில் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.Google Suite, MS Word, Excel and PowerPoint ஆகியவற்றில் நல்ல அறிவு இருக்க வேண்டும்.பல்வேறு சமூக வலைத்தளம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.வெளியில் பயணம் செய்ய விருப்பம் உடையவராக இருக்க வேண்டும்.
Senior Fellow 5+ ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் இருக்க வேண்டும்.தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.Google Suite, MS Word, Excel மற்றும் PowerPoint பற்றிய வேலை அறிவு இருக்க வேண்டும்.பல்வேறு சமூக ஊடக தளங்களைப் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அவற்றின் பயன்பாடு இருக்க வேண்டும்.ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச, படிக்க மற்றும் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும்.தொகுதி/மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க விருப்பம்உடையவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள https://drive.google.com/file/d/1v-3j98tIWBtnrgEiFt1LYaIG2fLlrgQo/view
இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform
இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.