ஜோயாலூக்காஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து நகைகளுக்கும் V.A-யில் ப்ளாட் 50 சதவீத தள்ளுபடியை ‘ஆச்சரியமான 50’ என வழங்குகிறது. கொரோனாவுக்கு பிறகு சமீப காலமாக தங்க விலைகள் தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான விலையில் நகை வாங்குவதற்கு அட்டகாசமான ஒரு ஷாப்பிங் வாய்ப்பை ‘ஆச்சரியமான 50 ஆபர்’ மூலம் வழங்குகிறது.
இதுபற்றி ஜோயாலூக்காஸ் குரூப் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘இந்த ஆபர் மூலம், V.Aயில் மார்க்கெட்டிலேயே மிகவும் மலிவான கட்டணமே வசூலிக்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்களிடம் ஷாப்பிங் செய்யும்போது, தங்கம், வைரம் மற்றும் இதர நகைக் கலெக்ஷன்களின் V.Aயில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற்று, மிகப்பெரிய சேமிப்பை பெறமுடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஜோயாலூக்காஸ் ஷோரூம்களிலும் இந்த குறுகிய கால ஆபரை மார்ச் 20ம் தேதிவரை பெறலாம்.
இந்த ஆச்சரியமான 50 ஆபருடன் சேர்த்து, வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச இன்சூரன்ஸ் வசதியும், ஜோயாலூக்காசிடம் இருந்து வழங்கப்படும் எல்லா நகைகளுக்கும், கோல்டு எக்சேஞ்ச் ஆபர்களுக்கும் ஆயுள்கால இலவச பராமரிப்பு சேவையும் வழங்கப்படுகிறது,’ என்றார்.