• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஜெய்பீம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது கலைஞர் டிவி

சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம்.த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுஇப்படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டு பாராட்டியது நினைவுக்கூறத்தக்கது.சமீபத்தில், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டிவி உரிமை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. இப்படத்துக்கு குறிப்பிட்ட ஜாதி அமைப்பினர்எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டிவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக வெற்றிபெற்றஜெய்பீம் போன்றபுதிய படங்களை வாங்குவதற்கு கடும் போட்டி இருக்கும் ஆனால் படத்துக்கு எதிராக ஜாதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படத்தை வாங்குவதற்கு விஜய், ஜீ போன்ற தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டவில்லை டிவியில் ஒளிபரப்பாகும் போது ஏதும் சிக்கல் வரலாம் என்பதே காரணம் என்கின்றனர்இந்நிலையில், ஆளும் கட்சியின் கலைஞர் டிவி துணிச்சலாக ஜெய்பீம் படத்தை சுமார் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்வருகிற பொங்கல் தினத்துக்கு டிவியில் ஒளிபரப்பாகுமாம்.