தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களில் அளவுக்கு அதிகமான கனிம வளங்களை விதிகளை மீறி கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜெயமங்களம் காவல் நிலையம் எதிரே விவசாய நிலங்களில் அளவுக்கு ,அதிகமாக கனிம வளங்களை ஹிட்டாச்சி, ஜேசிபி உள்ளிட்ட கனரா வாகனங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதனால் ஜெயமங்கலம் பெரியகுளம் சாலை முழுவதும் சேதம் அடைந்து வருகிறது.
வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் தார்ப்பாய் போடாமல் வேகமாக செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கனிம வளக் குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.