• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி- நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் வேண்டுகோள்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த நீலகிரி மாவட்ட கழக செயலாளர் அறிக்கை


அதிமுக கழக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படியும் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி வழிகாட்டுதலின்படி எதிர்வரும் திங்கட்கிழமை மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பிற அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நகர ஒன்றிய, பேரூராட்சி கழக செயலாளர்கள், வார்டு கிளை கழக செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் அறிக்கை விடுத்துள்ளார்.