• Thu. Sep 28th, 2023

பா.ஜ.க.வை விளாசித் தள்ளிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ..!

Byகுமார்

Jul 3, 2023

ஹிஜாபை கொண்டுவந்து கர்நாடகாவில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக வின் நிலையைப் போல, பொதுசிவில் சட்டம் கொண்டுவந்தால் இந்தியா முழுவதும் தொடரும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது..,
மத்திய சிவில் சட்ட வாரியம் சமீபத்தில் பொதுமக்களிடம் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து மக்களுடைய கருத்துக்களை கேட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி பேசும்போது நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருக்க முடியாது ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ஆணையத்தை அமைத்த அந்த  சட்ட ஆணையம் தனது அறிக்கையை அழித்து உள்ளது. அதில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்ததற்கான சாத்திய கூறுகள் என அறிக்கை தந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரக் கூடிய சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக ஒன்பது ஆண்டுகள் பாஜக ஆட்சியில் எல்லா வகையிலும் தோல்வி அடைந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தோடு மோடி சிறுபான்மை சமூகத்தை வைத்து சிறு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறார். பாஜகவின் கூட்டணி கட்சியான மிசோராமின் முதலமைச்சர் சட்டத்தை ஏற்கவில்லை .மேலும் மணிப்பூரிலும் இந்த சட்டத்தை ஏற்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவரை முஸ்லிம்கள் மட்டும் தான் தனி சட்ட வாரியம் அமைத்துள்ளனர்.
ஆனால் தற்போது சீக்கிய மதத்தினர் தனி சட்ட வாரியம் அமைத்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டும் எதிர்க்கவில்லை பாஜக கூட்டணியில் உள்ள கட்சியினரும்  எதிர்க்கின்றனர்.
 அயோத்தியிலே ராமர் கோவிலை கட்டி விட்டோம்' 370 பிரிவை நீக்கி விட்டோம் அதேபோல சிவில் சட்டத்தை கொண்டு வந்து 2024 தேர்தலிலே வெற்றி பெறுவோம் என மோடி நினைக்கிறார்.  அவருடைய கனவு பகல் கனவாகும் வாட்டர்லு போரில் பிரான்ஸ் மன்னன் நெப்போலியனை தோற்கடித்தது போல் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நிற்பார்கள். மோடி அரசாங்கத்தினுடைய இந்த பன்முக தன்மை குறித்து பண்பாட்டை சிதைக்க கூடிய நடவடிக்கைக்கு எதிராக மக்கள் செயல்படுவார்கள். கர்நாடகாவில் ஹிஜாபை கொண்டுவந்து ஆட்சியை இழந்த பாஜக போல் நிலைமை இந்தியா முழுவதும் வரும். பொது சிவில் சட்டம் பற்றி இஸ்லாமிய சமூக மக்கள் கவலைப்பட தேவையில்லை.
இந்தியர்களுக்கும் அவர்களுடைய தனிப்பட்ட பண்பாடு நடைமுறை கலாச்சாரம் ஆகியவற்றிக்கு எதிரானது ஒட்டுமொத்தமாக 'அனைவரும் எதிர்த்து மாற்றியமைப்பார்கள். .தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி இனி அந்தர் பல்டி ரவி என்று தான் அழைக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு அந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு வந்த பின் அவர் அதை மாற்றி அமைத்திருக்கக்கூடிய நிலைமை நாம் பார்த்துள்ளோம். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது ஒரு அமைச்சருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்துவது மட்டும் தான் ஆளுநர் கடமை ஆளுநர் முதலமைச்சர் யாரை நியமிக்கிறாரோ பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு பதவியேற்பு செய்து ஆளுநர் வேலை அவர் அமைச்சரை முதலமைச்சர் பரிந்துரையை அதை அங்கீகரிப்பது அவர்களுடைய வேலை. சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாக ஒரு அமைச்சரை நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.
சட்டவல்லுனர்களை கலந்து கொள்ளாமல் முடிவு எடுத்து   இருக்கிறார்கள் என்பதும் உள்துறை அமைச்சகம்.கூறி உள்ளது. மேலும் முதலமைச்சர் உள்துறை அமைசருக்கு எழுதிய கடிதத்திலேயே இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மிக தெளிவாக சட்ட ஆலோசனையும்  பெறாமல் தான் தோன்றித்தனமாக சர்வாதிகார மையமாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆளுநர் ரவியை மாளிகையில் இருந்து தொடராமல் ஒன்றிய அரசு திரும்பப்பெறும் வரை தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து தொடர் போராட்டம் நடத்த வேண்டும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகிறேன். .பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட கழகம் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்கின்றது.

பாஜகவிற்கு அடிமை மனப்பான்மையோடு இருக்கிறவர்கள் மட்டுமே அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். அரசியலில் ஓபிஎஸ் ஆண்டியாக தான் செயல்படுகிறார் ஓபிஎஸ் இன் அறிவின்மையை  வெளிப்படையாக தெரிகிறது:  நிச்சயமாக எதிர்க்கட்சிகள் ஒன்று சேரக்கூடிய அந்த நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா முழுவதும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 
பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் பாஸானார் என்பது தெரியவில்லை அரசியல் அமைப்பு சட்டத்தினுடைய பார்ட் 3 ஃபண்டமெண்டல் ரைட்ஸ் அடிப்படை உரிமைகளை பற்றி பேசுகிறது அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அபிலாசை வெளிப்படுத்துகிறது பொது சிவில் சட்டம் என்பது அம்பேத்கர் அவர்கள் விரும்பி இருந்தால் பண்டமண்டல் பிரிவில் சேர்த்திருக்கலாம் ஆனால் சேர்க்கவில்லை. காரணம் இது தொடர்பாக மக்களுடைய ஒருமித்த கருத்து எப்போது ஏற்படுகிறது அப்போதுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அம்பேத்கர் அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்.
சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் சொல்லி இருக்கிறார் இதையெல்லாம் பிரித்து இட்டுக்கட்டி அண்ணாமலை போன்றவர்கள் வரலாறு தெரியாமல் சட்டம் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள். மாமன்னன் திரைப்படம் ஒரு பவர்ஃபுல் ஆகுது ஒரு பணம் வாய்ந்த ஊடகமாக இருக்கின்றது.மக்களுடைய சிந்தனைகளை பெருமளவிலே மாற்றக்கூடிய ஒரு ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு.
ஜாதியை வன்கொடுமைகளை குறித்து மிகச் சிறப்பாக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கின்றார் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மதுரை வடிவிலும் நடித்த இந்த படம் ஜாதியை கொடுமைக்கு எதிரான ஒரு படம் நிச்சயமாக அது சமூக நீதி பாடத்தை மக்களுக்கு எடுத்து இருக்கிற சிறந்த திரைப்படமாக இருக்கின்றது என ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *