• Tue. Feb 18th, 2025

பௌர்ணமியை முன்னிட்டு.., திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் முப்பழ பூஜை..!

ByKalamegam Viswanathan

Jul 4, 2023

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பாலசுனை கண்ட சிவன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு, முப்பழ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள புகழ் பெற்ற பால் சுனை கண்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு மாதாமாதம் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆண்டுக்கு ஒரு பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு பழங்களான மா, பழா, வாழை என முக்கனிகளை வைத்து பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனி பௌர்ணமி ஆன இன்று 50 கிலோ எடை கொண்ட பழங்களால் பூஜை நடைபெற்றது.


முன்னதாக சிவபெருமானுக்கு பால், திருநீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.