• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு மைதானமா சர்க்கரை ஆலையா..? அலங்காநல்லூர் தொழிலாளர்களின் பரிதாப நிலை ..!

ByKalamegam Viswanathan

Jan 11, 2024

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 20 மாதங்களாக வழங்கப்படாத சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பதற்கு கொடுக்க வேண்டும்.
நேரடியாக 10 ஆயிரம் பேரும் மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் வேதனையை அனுபவிப்பதாக அலங்காநல்லூர் பகுதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் விவசாய குடும்பங்கள் புலம்புகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ள சர்க்கரை ஆலையை உடனடியாக திறந்து எங்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என கூறுகின்றனர்.

மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் மிக முக்கியமானது. இந்த சர்க்கரை ஆலையினை நம்பி ஆயிரம் தொழிலாளர்களும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாய குடும்பங்களும் சர்க்கரை ஆலை மற்றும் கரும்பு விவசாயிகளை நம்பி இந்தப் பகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் பயனடைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை ஆலை இயங்காமல் இருந்து வருகிறது.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை ஆலை இயங்காததால் ஆலையில் உள்ள தளவாடப் பொருட்கள் துருப்பிடித்து பயனற்ற நிலையில் உள்ளது. இதில் மேலும் வேதனை தரும் விஷயமாககடந்த 20 மாதங்களுக்கும் மேலாக பணியாளர்களுக்கு சம்பளம் தொகை நிலுவையில் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 5கோடியே 35 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கியது இந்த நிதியின் மூலம்பணியாளர் சம்பளம் பணிக்கொடை இதர செலவினங்கள் செலவிட ஒதுக்கிய நிலையில் ஆலை நிர்வாகம் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகையினை தர மறுத்து அதனை கடந்த 2018 மற்றும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட கடன் தொகைக்கு வட்டி கட்ட செலவிட இருப்பதாக கூறிய நிலையில் சக்கரைஆலை பணியாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த நிர்வாகிகள நிர்வாகத்தின ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த 20 மாதங்களாக நிலுவை துறை வழங்காமல் எங்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது சர்க்கரைஆலை நிர்வாகம் மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கடந்த ஆண்டுகளில் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட செலவிட போவதாக கூறி வருகின்றனர்.


ஆகையால் விவசாயிகள் மற்றும் ஆலை பணியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு உடனடியாக 20 மாத சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் சுமார் 50 கோடிக்கு மேல் செலவு செய்து ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் திமுக அரசு வெறும் 40 கோடியில் இயங்கக்கூடிய சர்க்கரை ஆலையை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. வேதனை தருகிறது சுமார் 1000 தொழிலாளர்கள் பணி புரியக்கூடிய இந்த சர்க்கரை ஆலையானது கடந்த ஐந்து வருடங்களாக இயங்காமல் உள்ளது இதனால் ஆலையில் உள்ள தளவாடப் பொருட்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் பயனற்ற நிலையில் உள்ளது.
மேலும் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசாங்கத்தால் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் ஆகையால் இந்த ஆலையை நம்பி உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் ஆகையால் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறப்பதற்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்கள் இந்த சர்க்கரை ஆலை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலையை உடனடியாக திறக்க நிதி ஒதுக்க வேண்டும் நிலுவை தொகையை பாக்கி இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.