• Mon. Dec 9th, 2024

ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் உள்ளது. இங்கு 18 ஆம் ஆண்டாக ஆடித்தபசு மற்றும் அன்னதான பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் யாகசாலை பூஜை நடைபெற்று, அம்மனுக்கு பால் ,பழம் ,தயிர் , தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக சக்கம்பட்டியில் உள்ள நேஷ நாயனார் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது .அப்போது பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து தங்கள் நேற்று கடனை நிறைவேற்றினார்கள்.விழாவை முன்னிட்டு பெண்கள் புற்றுக் கோவிலில் பால் ஊற்றியும், மஞ்சள் தெளித்தும் வழிபாடு செய்தனர் .ஏராளமான பெண்களுக்கு மஞ்சள், வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.