• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு! யாரை சொல்கிறார் வனிதா?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது அதகளமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் ஜூலியை வனிதா, உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதா ரொம்ப ஓவரா பேசுறாங்க, எல்லாத்தும் ஒரு அளவு இருக்கு என வசைபாடி வருகின்றனர்.

முந்தையாக சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டதால் இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே பெரிய வரவேற்பு இருந்தது. ஓடிடியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் இந்த நிகழ்ச்சி அதிக ரசிகர்களை சென்று சேரவில்லை. அதுவும் 24 மணி நேரமும் டிஸ்னி பிளாஸ் ஹாஸ்டாரில் எந்தவிதமான எடிட் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு ஓனர் போல நிகழ்ச்சிக்கு வந்த நாளிலிருந்தே செயல்பட்டு வருகிறார் வனிதா. வீட்டிற்கு வந்ததுமே அனைவர் இடத்திலும் டாஸ்கில் கலந்து கொள்ள, இங்கு நான் வரவில்லை, நான் நானாக இருக்கத்தான் இங்கே வந்தேன் என்றார். மற்றவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்றால் கேள்வி கேட்கும் கமல் வனிதாவை மட்டும் இதுவரை எந்த கேள்வியும் கேட்காதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில், வனிதாவை ஜூலி நாமினேட் செய்ததால் இருவருக்கும் இடையே சண்டை முட்டிக்கொண்டது. புள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுறா, நாமினேஷன்ல பன்னிட்டு No Heart feelingனு சும்மா சீன்போடுறியான என ஜூலியை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் வனிதா.

மேலும், நீ பண்ண வேலைக்கு உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு, போடி, என ஜூலியை ஒருமையில் பேசுகிறார் வனிதா. பொறுத்துத்து பொறுத்துப்பார்த்த பொங்கி எழுந்து, ஜூலி முதலில் உன்னை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு என பதிலுக்கு எகிறினார். பிக் பாஸ் வீட்டில் வனிதா ஒரு அராஜகமே செய்து வருகிறார். இந்த வாரமாவது கமல் இதை தட்டிக்கேட்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்!