• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனி வெள்ளத்தில் மிதக்காது.. சென்னை -மேயர்

ByA.Tamilselvan

Sep 30, 2022

சென்னையின் எந்தெந்த இடங்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என, மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன், “மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையைப் பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாவது பகுதியைப் பொறுத்தவரை 35 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையின் எந்தெந்த இடங்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே இருக்கிறது. அதுவும் அக்டோபர் 10-ம் தேதிகுள் நிறைவடைந்துவிடும்.
வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.