


73ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ஐந்து லட்சம் கோடி தான் ஆனால் திமுக ஆட்சி பொறுப்பெடுத்த நான்கரை ஆண்டுகளில் நிர்வாக திறமையின்மையாலும் ,மூலதன செலவு செய்யாமலும் ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.
கொலை கொள்ளை கடன் வாங்குவதில் தான் முதல் மாநிலமாக இருக்கிறது.இதனால் நீங்கள் செய்ய வேண்டியது தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் எத்தனை சின்னங்கள் இருந்தாலும் உங்கள் கண்களில் தெரிய வேண்டிய ஒரே சின்னம் இரட்டை இலை தான்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று அம்மா அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களிடம் நேரில் வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் தொகுதி செங்கப்படை கிராமத்தில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார்.
திண்ணை பிரச்சாரத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செங்கப்படை கிராமத்தில் வீதி,வீதியாகச் சென்று பொது மக்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை நேரில் வழங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் திமுகவை வீழ்த்தி மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திடும் வகையில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசைவ அன்னதானத்தை தொடங்கி வைத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் புளியங்குளம் ராமகிருஷ்ணன் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம் மாவட்ட பொருளாளர் திருப்பதி ஒன்றிய செயலாளர்கள் ராமையா கண்ணன் பிரபுசங்கர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சரவணபாண்டி சிவசக்தி நிர்வாகிகள் சிவரக்கோட்டை ஆதிராஜா சாமிநாதன் அன்னமுத்து வெள்ளாகுளம் ரமேஷ் பழனி கண்ணபிரான் கப்பலூர்சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது,
கத்தரி வெயில் தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி இல்லை.தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களை பாதுகாக்க கூடிய காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள் இது குறித்து விவாதம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள்.
சுதந்திரம் அடைந்து 77 ஆண்டு ஆகிறது.இதில் 73ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ஐந்து லட்சம் கோடி தான் ஆனால் திமுக ஆட்சி பொறுப்பெடுத்த நான்கரை ஆண்டுகளில் நிர்வாக திறமையின்மையாலும் ,மூலதன செலவு செய்யாமலும் ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.ஆனால் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்கிறார்.கொலை கொள்ளை கடன் வாங்குவதில் தான் முதல் மாநிலமாக இருக்கிறது.இதனால் நீங்கள் செய்ய வேண்டியது தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் எத்தனை சின்னங்கள் இருந்தாலும் உங்கள் கண்களில் தெரிய வேண்டிய ஒரே சின்னம் இரட்டை இலை தான் என தனது பேச்சை நிறைவு செய்தார்.

