மதுரை அமிக்கா ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர்

ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு தயாராகும் 100 கிலோ பிரம்மாண்ட கேக் – 40 kg எடையுள்ள செர்ரி, வால்நட், பிஸ்தா முந்திரி உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன் உயர்ரக மதுபானங்களில் கலவையாக சேர்க்கப்பட்டு 30 நாட்கள் பதப்படுத்துவதற்காக வைப்பு *

நமது கலாச்சாரத்தில் அறுவடையை போற்றும் விதமாக பொங்கல் திருவிழா கொண்டாடுவது போல் ஐரோப்பிய நாடுகளில் அறுவடை திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் தொடக்கமாக கேக் திரு விழா நடைபெறுவது வழக்கம்.
அடுத்த மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் கேக்கு உற்பத்தி செய்யும் பணியானது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரை அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள அமிக்கா நட்சத்திர விடுதியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி கேக் திருவிழாவிற்காக கேக் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

100 கிலோ எடைக்கு மேல் இந்த பிரம்மாண்ட கேக்கில் 40 kg எடையுள்ள செர்ரி, வால்நட், பேரிச்சை, பிஸ்தா ,முந்திரி, ப்ரூம்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன் உயர்ரக மதுபானங்களில் கலவையாக 30 நாட்கள் நன்கு பதப்படுத்தப்பட்டு வைக்கப்படும் பின்பு 30 நாள் கழித்து அந்தப் பதப்படுத்தப்பட்டுள்ள உயர் பழங்கள் 100 கிலோ எடை கேக்குடன் கலந்து சேர்க்கப்படும் .
முன்னதாக உலர் பழங்கள் அடங்கிய பைகளை அமைக்க ஹோட்டல் சமையல் கலைஞர்கள் பேண்ட் இசைக்க எடுத்து வந்தனர் அதனை முக்கிய பிரமுகர் முன்னிலையில் முதன்மை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தயாராக இருந்த பெரிய பாத்திரத்தில் உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்களை கலந்து சேகரித்தனர் .
கேக் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மதுரை சூரியன் எஃப் எம் நிகழ்ச்சி தொகுப்பாளர் மதுரை மதினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கேக் விழாவை சிறப்பித்தனர் .
தயாராகி வரும் கேக் கிறிஸ்மஸ் பண்டிகை தினம் மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அமிக்கா பொது மேலாளர் பால் அதிசயராஜ் கூறினார் .












; ?>)
; ?>)
; ?>)