• Wed. Dec 11th, 2024

பாகிஸ்தானில் தனது வீட்டுக்கு தானே தீ வைத்த அவலம்…

Byமதி

Oct 19, 2021

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு பெண்களுக்கு தந்தையான ஒருவர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்து உள்ளார் என போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அவரது இரண்டு மகள்களில் ஒருவர் அவரது விருப்பமின்றி காதல் திருமணம் செய்து கொண்டதால் இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாகிஸ்தானில் உள்ள முசாபர்கர்க் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று சகோதரிகளான ஃபவூசியா பீபி மற்றும் குர்ஷித் மாய் பகிர்ந்து கொண்ட வாழ்ந்த வீட்டுக்கு அவர்களது தந்தை மன்சூர் ஹுசைன் தீயிட்டுள்ளார். அப்போது அவரது மகள்களுடன் நான்கு பேரக்குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். மேலும் குர்ஷித் மாய் கணவரும் இருந்துள்ளார். இவர்கள் அனைவரும் தற்போது தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் போது மெஹபூப் அகமது வேலைக்கு சென்றதால் உயிர் தப்பியுள்ளார். அவர் மறுநாள் அதிகாலை வேலை முடித்து வீடு திரும்பிய போதே அசம்பாவிதம் குறிந்து அறிந்துக் கொண்டுள்ளார். 13 வயது, 6 வயது,2 வயது மற்றும் நான்கு மாத குழந்தை என நான்கு பிஞ்சுகள் தீயில் கருகி உள்ளன என போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் அவர். அதில் மூன்று குழந்தைகள் குர்ஷித்மாய் உடையது.