• Thu. Apr 24th, 2025

இஸ்ரோவின் விண்வெளி பூங்காரூ.100 கோடி திட்டத்தில் கன்னியாகுமரியில் உருவாக்கம்.

கன்னியாகுமரியில் விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி மையம் அமைப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.100 கோடி மதிப்பிலான திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமம் அருகே. சூரியனின் அஸ்தமனம் பகுதியில் இதற்கான இடத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் பார்வையிட்டார்.

இதற்காக தமிழக அரசு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது, மேலும் மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இத்திட்டம் முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த கே. சிவனை அப்போதைய தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து, இதற்கான நில ஒதுக்கீட்டை வழங்கினார்.

தற்போது, இஸ்ரோவின் புதிய தலைவராக கன்னியாகுமரியைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் 2025 ஜனவரி 14 முதல் பொறுப்பேற்றுள்ளார்அவரது தலைமையின் கீழ், இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் பின்னணி இது பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 18 மாதங்களில் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு இத்திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து, கன்னியாகுமரியில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இது கன்னியாகுமரியின் சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்கு கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே அல்லாது ஒரு சர்வதேச சுற்றுலா மையமாக உள்ள பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான நிதி மற்றும் நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது, இது இஸ்ரோவின் நாடு தழுவிய விண்வெளி பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

முனைவர். நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேலகாட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர், 2025 ஜனவரி 13 அன்று இஸ்ரோவின் தலைவராகவும், விண்வெளித்துறை செயலாளராகவும் பொறுப்பேற்றார். அவர் 1984 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார் மற்றும் திரவ உந்து அமைப்புகள் மையத்தின் இயக்குநராக இருந்தவர். சந்திரயான்-3, ககன்யான் மற்றும் அதித்யா L1 போன்ற முக்கிய திட்டங்களில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சந்திரயான்-2 தோல்வியை ஆய்வு செய்து, சந்திரயான்-3 வெற்றிக்கு வழிவகுத்த திருத்தங்களை பரிந்துரைத்த குழுவை அவர் தலைமையேற்றார்.

இவரது பிறப்பிடமான கன்னியாகுமரியில் இத்திட்டம் அமைவது, அவரது தலைமையின் கீழ் உள்ளூர் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
விண்வெளி அருங்காட்சியகம்: இது விண்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைகள், வானியல் மற்றும் இந்திய விண்வெளி திட்டங்களைப் பற்றிய காட்சிப்பொருட்களை உள்ளடக்கி இருக்கும்.

தொழில்நுட்ப பூங்கா: இது, மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்கும். விண்வெளி தொடர்பான விளையாட்டுகள் மற்றும் தானியங்கி அமைப்புகள் இதில் இடம்பெறும்.

கன்னியாகுமரியை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனித யாத்ரீகர்களுக்கு இது ஒரு கூடுதல் ஈர்ப்பாக அமையும். எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான கல்வி வாய்ப்புகளை இது வழங்கும்.

இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வி, சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி. நாராயணனின் தலைமையில், கன்னியாகுமரி திட்டமும் விரைவாகவும் திறமையாகவும் செயல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. மேலும், இது இளைஞர்களை விண்வெளி ஆராய்ச்சியை நோக்கி ஈர்க்கும் ஒரு உந்துதலாகவும் இருக்கும்.

வி. நாராயணனின் தலைமையில், அவரது சொந்த மாவட்டத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது, தமிழகத்திற்கும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கும் பெருமை சேர்க்கும். 2026-ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டம், இயல்பாகவே எழுத்தறிவு அதிகம் பெற்ற மக்களை கொண்ட கன்னியாகுமரியை ஒரு விண்வெளி கல்வி மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.