• Thu. Apr 24th, 2025

குமரியில் புகழ் பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் கொடியேற்றம்.

கன்னியாகுமரி ‌மாவட்டம் கொல்லங்கோடு ‌பத்திரகாளிஅம்மன்
கோயில் அம்மையிறக்க விழா கொடி ஏற்றத்துடன் துவக்கம் தமிழகம் கேரளாவில்‌‌ இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ‌கொல்லங்கோட்டில் புகழ் பெற்ற பத்திர‌காளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வருடாந்திர பங்குனி‌பரணி விழா இன்று‌ கோலாகலமாக துவங்கியது. முன்னதாக தேவி எழுந்தருளியிருக்கும் ‌வட்டவிளை கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அம்மன் விக்கிரகங்கள் மேளதாளம் பச்சை வாத்தியம் மூழங்க நுற்றுக்கணக்கான முத்துகுடை ஏந்திய படி விழா நடைபெறும் வெங்கஞ்சி கோயிலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த கமுகு மரத்தால் ஆன கொடி மரத்தில்
கொடி ஏற்றப்பட்டது.

இந்த கொடி ஏற்று‌ நிகழ்வில்‌ தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் பத்து நாட்கள் நடக்கும். இந்த விழாவில் தமிழகத்திலேயே புகழ்பெற்ற குழந்தை கள் தூக்க நேர்ச்சை வழிபாடு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி பத்தாம் விழா அன்று நடைபெறுகிறது.