

குமரி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் குமரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில், நாகர்கோவிலில் இளங்கடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச்_23)ம் தேதி இரவு நடந்தது.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், சிறுபான்மை பிரிவு தலைவர் சபிக்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித் மற்றும்
தி மு க வில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள், அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர்.

