



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக இன்று 9/2/2025 ஞாயிற்றுக் கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்னும் பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட இஸ்லாம் அல்லாத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் சகோதரர் எம். ஏ.அப்துல் ரகுமான் சிறந்த முறையில் பதில் அளித்தார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்லாம் அல்லாத சகோதர சகோதரிகள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள் மேலும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.



