• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

இது சந்திரமுகி காம்பினேஷன் தான?!?

தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 169- திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் நடிகர்கள் குறித்த அப்டேட் வரிசையில், தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.நடிகர் வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், தற்போது ரஜினியின் 169-வது படத்தில் வடிவேலு நடிப்பதாக பரவும் செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே ரஜினியின் வள்ளி, குசேலன், முத்து, சந்திரமுகி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.