
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இதில், பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது. சிவகார்த்திகேயன் பாடல் வரியில் அனிருத்தின் இசையில், அனிருத் மற்றும் செல்லம்மா பாடல் புகழ் ஜோனிட்டா காந்தி ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். வழக்கமாக நடனத்தில் பட்டையை கிளப்பும் விஜய், இந்த பாடலில் அட்டகாசப்படுத்தி இருப்பார். இந்த பாடலுக்கு ஏற்றார் போல் விஜய் காஸ்டியூம் தரமாக இருக்கும். அந்த பாடலில் உடைக்கு ஏற்றாற் போல விஜய் தனது கழுத்தில் சிலுவை போன்ற டாலரை அணிந்து இருப்பார். இதைப்பார்த்த பலர் அந்த புகைப்படத்தை வட்டமிட்டு இதை தவிர்த்து இருக்கலாம் என்பது போல கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனால், கடுப்பான விஜய்யின் ரசிகர்கள், இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்றும், நன்றாக பாருங்கள் அது சிலுவை அல்ல நங்கூரம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், காஸ்டியூமுக்கு ஏற்ற மாதிரி டாலர் போட்டது ஒரு குத்தமா என கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.