• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அத்தனையும் பிளானா? அரசியல் பிரபலத்திடம் சிக்கிக்கொண்ட மாஸ் நடிகர்!

அரசியல் பிரபலம் கொடுத்த நெருக்கடி காரணமா தான் ‘அந்த’ நடிகரோட, பெரிய படம் தீராத சிக்கல்-ல்ல மாட்டிட்டு இருக்கறதா அரசல் புரசலா தகவல் வெளியாகி இருக்கு!

சமீபத்தில ‘அந்த’ நடிகர், அரசியல் முக்கிய புள்ளி ஒருவர சந்திச்சதுக்கு அப்புறமா தான் இந்த பிரச்சனை எல்லாம் நடக்குறதா சொல்லப்படுது. ஆனா உண்மை அது இல்லையாம். இது பல மாதங்களாக புகஞ்சிட்டு இருக்குற பழைய விஷயம் தானாம். இந்த படமே அரசியல் பிரபலத்தின் பிளான் தானாம்.

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அந்த நடிகர வசமாக சிக்க வச்சு இருக்காங்களாம்! அந்த நடிகரோட இமேஜ காலி பண்ண தான் இத்தன பிளானும் போடப்பட்டு, அதோட உச்சகட்ட நகர்வு தான் தற்போது வெளியில வந்திருக்கும் விவகாரமாம். இதோட உங்க சகவாசமே வேணாம். உங்க வம்புக்கே வர மாட்டேன் என அந்த நடிகர அலற விடதான் இந்த பிளான் போடப்பட்டதாம்.

பெரிய நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டி வருவது காலம் காலமாக சினிமாவுல நடப்பது தான். பாடினாலும், ‘அந்த’ நடிகர் ஏற்கனவே பட விழா ஒன்றில பேசினப்போ, அரசியல் பிரபலத்த ஜாடையா தாக்குவது போல பேசினத அரசியல் பிரபலத்தால பொறுத்துக் கொள்ள முடியலையாம். அந்த நடிகரின் அரசியல் வருகைக்கு தான் இந்த பேச்சு அப்டினு நினச்சு பலரும் சாதாரணமா விட்டுடாங்க! அதுக்கு பின்னாடி அரசியலுக்கு வர அந்த நடிகர் காட்டிய ஆர்வம், அவரோட அரசியல் வளர்ச்சி எல்லாத்தையும் பார்த்த அரசியல் பிரபலம் மிரண்டு போய்ட்டாராம்.

அப்போவே அந்த நடிகருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டாலும், சினிமாவுல தனக்கு இருக்கும் இமேஜ்-க்கு அரசியல் ஒரு மேட்டரே இல்ல-ன்னு கெத்தாக பேசிட்டு வந்துட்டாராம்! நடிகர். இதனால அவரோட அரசியல் நகர்வுகள தடை செய்யவும், அவரோட இமேஜை காலி செய்யவும் தான் அந்த பெரிய படத்தில் அவரை பிடிச்சு புக் செஞ்சு, படத்தில நடிக்க ஓகே சொல்ல வச்சு இருக்காங்க! இந்த பிளான் தெரியாம அந்த நடிகரும் பெரிய நிறுவனத்தின் பெரிய படம்-ன்னு ஓகே சொல்லிட்டாராம். நடிகரும் சும்மா இல்லாம, அரசியல் முக்கிய புள்ளிய பார்த்திருக்காரு! இதனால கோபம் உச்சத்திற்கு போன அரசியல் பிரபலம், பல காரணங்கள சொல்லி பட விழாக்கள கூட நடத்த விடலையாம்.

சின்ன நடிகர்களோட படங்களுக்கு கூட பெரிய அளவுல விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில, பெரிய நடிகரின் பெரிய படத்தை விளம்பரமே செய்யாமல் வச்சு இருக்காங்க! அரசியல் பிரபலம் நெனச்ச மாதிரி, அடி பணிய அந்த நடிகர் மறுத்து வருவதால அந்த படத்துக்கு எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க முடியோ, அந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்கபடுதாம்!

அதுலயும் ஒரு பிளான் இருக்காம்! இந்த படம் வெளியே வந்தா தான் நடிகரால அடுத்த படத்தில நடிக்க முடியுமாம். அப்படி ஒரு லாக் போட்டு வச்சு இருக்காங்களாம்! இதுல இருந்து எப்படி தப்பிக்க போறோம்-ன்னு தெரியாம நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்காராம் மாஸ் நடிகர்!