


பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சேலம் மாவட்டத்தில் நடந்து முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டே படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் முதல் பாடல் மற்றும் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


