

தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே பிரபலமடையும்.. அந்த வகையில் பான் இந்தியா வரைக்கும் ஒலிக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பல மொழிகளில் இந்த ஷோ மிகவும் பிரபலம்.. அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸ்-ஐ நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சமயத்தில் நகர்ஜூனாவை தொடர்ந்து தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்க பிரபல தமிழ் நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதமுள்ள வாரம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, 7 சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று, தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளன. இதில், கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நகர்ஜூனா, 6 சீசன் ஐ தொகுத்து வழங்கவில்லை என்று கூறிவிட்டார். ஏற்கனவே கடந்த 2020ல் நகர்ஜூனா ஷூட்டிங் சென்ற போது சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. எனவே, இந்த முறை முழு தொகுப்பாளராக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்க பிரபல தமிழ் நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.