• Mon. Mar 27th, 2023

வரம்பு மீறுகிறாரா சமந்தா?

சமூகவலைத்தளங்களின் அபாரமான வளர்ச்சிக்கு பின் திரைபிரபலங்கள் தங்களை பற்றிய தகவல்கள், புகைப்படங்களை இத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் நடிகைகள். தங்கள் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்களின் கவனத்திற்குள்ளாகி புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் வளர்ந்து முன்னணி நடிகையான பின்பும் உச்ச கட்ட கவர்ச்சி ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வலைதளங்களை சூடாக்கி வருகின்றனர். வட இந்திய நடிகைகள் மட்டுமே செய்து வந்த இது போன்ற செயல்களை தென்னிந்திய மொழி நடிகைகளும் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர்.

நடிகை நயன்தாரா தன் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின் தன்னை முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக்கொள்ள எந்த எல்லைக்கும் போவேன் என்பதை அவர் வெளியிடும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது

சென்னையில் பிறந்து வளந்தவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அழகால் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, பாணா காத்தாடி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா நடித்த ‘நான் ஈ’ திரைப்படம் இவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக்கியது. இதையடுத்து இவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சமந்தா, படிப்படியாக விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், கடந்தாண்டு இந்தியில் தயாரிக்கப்பட்ட தி பேமிலி மேன் என்கிற வெப்தொடரில் நடித்தார்.
இந்த வெப் தொடர் தான் அவரது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது என்கின்றனர். இந்த வெப் தொடரில் நடிகை சமந்தா சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இது நாக சைதன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவின் திரையுலக வாழ்க்கை ஜெட் வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது என்றே சொல்லலாம். சமந்த தற்போது அரை டஜன் படங்ளுக்கு மேல் நடித்து வருகிறார். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார் சமந்தா. இந்த பட்டியலில் நடிகை நயன்தாரா முதலிடத்தில் உள்ளார்.

நடிகை சமந்தா நேற்று நடந்த ஒரு தனியார் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் என்கிற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது உள்ளது. அந்த விழாவில் சமந்தா அணிந்து வந்த உடையை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். பச்சை நிற மாடர்ன் கவுனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *