• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி போட்டியிடப்போவது மதுரையிலா ?ராமநாதபுரத்திலா?

ByA.Tamilselvan

Jan 2, 2023

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மதுரை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பாஜக சார்பாக பிரமர் மோடி மதுரை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என அவரது தமிழக கட்சி தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாநகர் முழுவதும் நரேந்திர மோடியின் பிறந்தநாள் போஸ்டரில் பிரபல செய்தி சேனல்களில் வருவது போல ‘பிரேக்கிங் ஹெட்லைன்ஸ் 2024 மக்களவைத் தேர்தல் மதுரையில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றார்’ என்பது போல பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களின் புகைப்படங்களுடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. தமிழகத்தில் பாஜக காலூன்ற திட்டமிட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் போட்டியிடுவார் என கடந்த சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறது.


அதோபோல ஆங்கில நாளிதள் ஒன்று பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிப்போவதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவை பிரதமர் மோடி போட்டியிப்போவது மதுரையா அல்லது ராமநாதபுரமா என அவரது தமிழக கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.