


தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாரா, தனது இரண்ட குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காக சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலையில், மகன்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொண்டு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

