பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப் 2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த படங்களில் லிஸ்டில் 2வது இடம் பிடித்திருந்தது. தமிழகத்திலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, சென்னையில் ரூ. 10 கோடியை எட்டியுள்ளது. எல்லா மொழிகளிலும் செம ஹிட் கொடுத்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதன் முதல் பாகத்தை அமேசன் பிரைம் தான் வாங்கியிருந்தார்கள். எனவே இதன் 2ம் பாகம் அவர்களே வாக்குவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் கேஜிஎஃப் 2 படத்தை கைப்பற்ற ஜீ நெட்வொர்க் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் 320 கோடி வரை விலை கொடுத்து கேஜிஎஃப் 2 படத்தை வாங்க முயற்சிக்கிறார்களாம். ஆனால் யார் படத்தை வாங்குகிறார்கள், எப்போது ரிலீஸ் என்பது எல்லாம் சரியாக தெரியவில்லை.