
புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியில் முதலமைச்சரின் துணையோடு பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

விலையில்லா அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்கு சாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியின் துணையோடு அதிகாரிகள் கொள்ளையடித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடியால் புதுச்சேரி மாநில விவசாயிகளோ அரிசி ஆலை உரிமையாளர்களோ மக்களோ எந்தவித பயணம் அடையவில்லை அதற்கு மாறாக புதுச்சேரியில் தற்போது ரேஷனில் வழங்கப்படும் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் புதுச்சேரிக்கு 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

கடந்த டென்டரின் போது ஒரு கிலோ அரிசி 47 ரூபாய் 70 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு கிலோவிற்கு ரூ.9/- கூடுதலாக வழங்கிய நிலையில்,அதே ஒரு கிலோ அரிசிக்கு ரூ.15/-கூடுதலாக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய அவர்…
வடமாநில கம்பெனிக்கு புதுச்சேரியில் சொந்தமான அரசி ஆலலயோ கொள்முதல் நிலையமும் இல்லாத நிலையில் விவசாயிகளை புறக்கணித்துவிட்டு வட மாநில கம்பெனிக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
தற்போது நடைமுறையில் உள்ள இந்த முறைகேடான டெண்டரை உடனே
ரத்து செய்துவிட்டு, புதுச்சேரியின் சிறு குறு விவசாயிகள், அரிசி ஆலைகள்
பயன்பெறும் வகையில், புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து,டெண்டரில் கலந்து கொள்ள ஏதுவாக மாற்றியமைக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
