
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதுமாக விளங்கும் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 31- ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து விழாவின் முடிவில் இன்று இந்து அறநிலைத்துறை அலுவலர் முன்னிலையில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மூலமாக கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு திருக்கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
