• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடமாடும் ஏரியூட்டு வாகனம் கிராமப்புறத்தில் அறிமுகம்

ஈரோடு கிராமப்புறத்தில் வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை குறைக்க ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தாரால் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரில் இரண்டாவது காசி என்று அழைக்கப்படும் காவிரி கரையில் சோளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மின் மயானம் ஈரோடு மாநகராட்சியும் மற்றும் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளையும் இணைந்து கடந்த 14 ஆண்டுகளாக நகர்புற பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிராமப்புறத்தில் வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை குறைக்க அவர்கள் சேவை பெறும் வகையில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தாரால் முடிவெடுக்கப்பட்டு, இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு சேவையை இன்று முதல் துவக்கி உள்ளனர்.
கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய வேண்டுமானால் ரூபாய் 15,000/- வரை செலவாகும் மற்றும் சுமார் 8 மணி நேரம் ஆகும். ரோட்டரி ஆத்மா எரியூட்டு வாகனம் மூலம் எரியூட்டும் போது ஒரு மணி நேரத்தில் எரியூட்டி அஸ்தி வழங்கப்படும்.இதனால் கிராமப்புற பொதுமக்கள் பயன் பெறுவார்கள். இதற்கு ரூபாய் 7,500/- மட்டும் எரியூட்டு கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தத் தொகையை Google Pay அல்லது Phonepe மூலம் செலுத்தலாம்.இந்த ஏரியூட்டு வாகனம் குறிப்பாக மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் எரியூட்டப்படும் என்பதை தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
இந்த துவக்கவிழா நிகழ்ச்சி ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி. ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவரும் மற்றும் முன்னாள் ரோட்டரி ஆளுநருமான டாக்டர் சகாதேவன் முன்னிலை வகித்தார், ரோட்டரி மாவட்டம் 3203 ஆளுநர் பி.இளங்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை ஆத்மா அறக்கட்டளை செயலாளர் வி.கே. ராஜமாணிக்கம், பொருளாளர் எஸ். சரவணன் மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ரு ஞானமுருகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் (TOLL FREE NUMBER: 9655 719 666) தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யும் நபர்கள் உறுதிமொழி படிவம் மற்றும் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று ரோட்டரி ஆத்மா மின்மயான அறக்கட்டளை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது,
கிராமப்புற சேவை திட்ட எரியூட்டு வாகனத்தை எதிர்வரும் காலங்களில் தமிழக அரசுடன் ரோட்டரியும் இணைந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தலாம் என அரசிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த திட்டம் உள்ளது