தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம். மேலும் நீட் நுழைவுச் சீட்டுகளில், தேர்வர்கள் தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி, ரோல் எண் மற்றும் அறிக்கையிடும் நேரம் ஆகியவற்றைச் சரிபார்க்கலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வு குறித்த கட்டுப்பாடுகள், என்ன செய்யக்கூடாது, தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய ஆடைக் குறியீடு போன்ற பல முக்கியமான வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளது.