விளையாட்டுவீரர்கள்,விளையாட்டு ஆர்வமுள்ளவர்கள் ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்படுத்துமாறு விருதுநகர் மாட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு வீரர்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்துகொள்வதற்கும்,விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலியான ஆடுகளம் செயலியினை பதிவேற்றம் செய்து பயன்படுத்தவேண்டும்.
இந்தசெயலியினை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டுவீர்ரகளின் இமெயில்முகவரி,தொலைபேசிஎண்,பிறந்ததேதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யவேண்டும். இனி வருங்காலங்களில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் மற்றும் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்தசெயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே டிஜிலாக்கர் மூலம் வழங்கப்பட்வுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்கள்,விளையாட்டு வீரர்கள்,விளையாட்டு ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் ஆடுகளம் செயலியினை பதிவேற்றம் செய்து பயன்படுத்துமாறு விருதுநகர் மாவட்டகலெக்டர் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளனர்.