
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. பொட்ரோல்,டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி ஒருபுறம் உயர்ந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கி வருகின்றன. கடந்த வாரம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அள விற்கு, பங்குச் சந்தை முதலீட்டா ளர்கள் இழப்பைச் சந்தித்தனர். இந்நிலையில், நடப்பு வர்த்தக வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்க ளன்றும் இந்தியப் பங்கு சந்தைகள் சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 365 புள்ளிகள் வரையும், நிப்டி 109 புள்ளிகள் வரையும் வீழ்ச்சி கண்டன. இதனால், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப் பும், 77 ரூபாய் 41 காசுகள் என்ற அள வில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. முந்தைய அமர்வில் ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய் 93 காசுகளாக முடிவடைந்து இருந்தது. திங்களன்று காலை வர்த்தகத்தின் துவக்கத்தில் 77 ரூபாய் 06 காசுகள் என சரிந்த ரூபாய் மதிப்பு, காலை 9.10 மணியளவில் 77 ரூபாய் 28 காசுகளாகவும், ஒரு கட்டத் தில் 77 ரூபாய் 31 காசுகள் என்ற அளவி ற்கும் 77 ரூபாய் 48 காசுகளாகவும் மிகமோசமான வீழ்ச்சியைக் கண்டது. கடந்த மே 7-ஆம் தேதி டாலருக்கு இணையான ரூபாய் அதிகபட்சமாக 76 ரூபாய் 98 காசுகளாக வீழ்ச்சி கண்டி ருந்தது.
ஆனால், இது மே 9 அன்று 77 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி, ஏற்கனவே வட்டி விகி தத்தை அதிகரித்துள்ளது. இது மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையும் இருந்து வருகின்றது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை திடீரென உயர்த்திய நிலையில் பத்திரச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது சந்தையில் முதலீடுகள் குறைய வழி வகுத்துள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் வங்கியும் இந்தக் காலத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பது, இந்தியச் சந்தையில் இருந்து முத லீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளது. இவையெல்லாம் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் (NRI), இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்பும் போது கூடுதலான தொகை அவர் களுக்குக் கிடைக்கும். இந்தியாவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்களும் அதிக லாபம் பெறும். அந்நிய செலா வணியும் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும், கச்சா எண்ணெய்யை அதிக விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதால், இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகள் மேலும் அதிகரிக்கும். பணவீக்கம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலைவாசி களும் கடுமையாக உயரும் ஆபத்து எழுந்துள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியோ இந்தியாவில் ஏற்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளிவரும் நிலையில் தற்போதைய ரூபாயின் வீழ்ச்சி அதை நோக்தித்தான் இந்தியா செல்கிறதோ என என்னதோன்றுகிறது.
