• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாட்ஸப்சேனல் அறிமுகம்

Byவிஷா

May 15, 2024

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தகவல்களைப் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் பெரும் விதமாக பள்ளிக்கல்வித்துறை வாட்ஸப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது.
இதற்கு மேலும் ஒரு முக்கிய காரணமாக பிற தளங்களில் கல்வி குறித்து மாணவர்கள் தேடும்போது அவர்களுடைய டேட்டா திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தனியார் கல்வி நிறுவனங்கள் லீக் செய்யப்பட்ட டேட்டா மூலம் மாணவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியில் சேர வலியுறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே மாணவர்களின் தனிப்பட்ட டேட்டா தரவுகளை பாதுகாக்கும் நோக்கிலும் முழுக்க முழுக்க உண்மையான செய்திகளை இந்த சேனல் மூலம் பாதுகாப்பான முறையில் மாணவர்களால் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.