• Sun. Sep 8th, 2024

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்..!

Byவிஷா

Jun 21, 2023

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என எண்ணும் பெண்கள் காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 004-23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம். காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். பெண்கள் அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இது இலவச சேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *